போலீசார் விழிப்புணர்வு

திருப்பூர், ; திருப்பூர் மாநகர போலீசார் சைபர் மோசடிகள் குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்றைய வளர்ந்து வரும் அறிவியல் உலகத்தில் அன்றாடம் புதிய வகையில் பொதுமக்களை தொடர்பு கொண்டு மோசடி ஆசாமிகள் கைவரிசை காட்டி வருவது தொடர்கதையாக உள்ளது.

வங்கியில் இருந்து பேசுகிறேன் ஆரம்பித்து முதலீடு இல்லாமல் அதிக லாபம் என பல்வேறு நுாதன முறையில் பேசி மக்களை ஏமாற்றுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் எவ்வளவு தான் விழிப்புணர்வு செய்தாலும், இந்த மோசடி குறித்து தெரியாமல் இன்னும் பலர் விழிப்புணர்வின்றி உள்ளனர்.

இச்சூழலில், திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மோசடி ஆசாமிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் ஒவ்வொரு நாளும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் தொடர்பு போன்றவை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement