புதுச்சேரியில் 20ம் தேதி முதல் சட்டமுறை எடையளவைத்துறை சிறப்பு முகாம்

புதுச்சேரி : புதுச்சேரியில் வரும் 20ம் தேதி முதல் சட்டமுறை எடையளவைத்துறை சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

இது குறித்து தட்டாஞ்சாவடி சட்டமுறை எடையளவை கட்டுபாட்டு அதிகாரி அலுவலக செய்திக் குறிப்பு:

வணிகர்கள் அனைவரும் தங்களுடைய பயன் பாட்டியில் உள்ள எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்கள் ஆகியவற்றை உரிய தொகை செலுத்தி அரசாங்க முத்தியை பதித்து அதற்குரிய சான்றி தழைப் பெற்று அதனை தங்களுடைய கடைகளில் பார்வையான இடத்தில் வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.

புதிய எடைகள் மற்றும் இயந்திரங்கள் வாங்கும்போது அரசாங்க முத்திரை உள்ளதா என, பார்த்து வாங்க வேண்டும்.

முத்திரை இல்லாத அனைத்து வகை எடையளவு தராசுகள் பறிமுதல் செய்யப்படும்.

வணிகர்கள் நலன் கருதி, அவர்கள் வியாபாரம் செய்து வரும் வியாபார மையங்களுக்குகே சென்று சட்டமுறை எடையளவைத்துறை ஆய்வாளர்கள் புதுச்சேரி பகுதியில் உள்ள முக்கிய வியாபார மையங்களில் கீழ்க்கண்ட் நாட்களில் காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை சிறப்பு முகாம் நடத்தி எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்கள் ஆகியவற்றை முத்திரையிட உள்ளனர்.

அதன்படி வரும் 20ம் தேதி நெல்லிதோப்பு சந்தை, 22ம் தேதி முதலியார்பேட்டை, 26ம் தேதி அரியாங்குப்பம், 28ம் தேதி உழவர் சந்தை, லாஸ்பேட்டை, 30ம் தேதி சின்னக்கடை மார்க்கெட் மற்றும் உழவர்சந்தை ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement