ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங்; ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பயணம்

புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் புறப்பட்டு சென்றுள்ளார்.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.


அதன்பிறகு, கடந்த மே 10ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் இறுதி செய்யப்பட்டது.


இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது, ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்பு படையினரை சந்தித்து, பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்க உள்ளார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீருக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.


கடந்த 12ம் தேதி எல்லை பாதுகாப்பு குறித்து உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில், ராஜ்நாத் சிங் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement