உ.பி யில் டபுள் டெக்கர் பஸ்சில் பற்றியது தீ; குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

லக்னோ: லக்னோவில் டபுள் டெக்கர் பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் 2 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
பீஹாரில் இருந்து டில்லிக்கு டபுள் டெக்கர் பஸ்சில் 70க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். லக்னோ அருகே பஸ் சென்று கொண்டு இருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர்வாசிகளும், தீயணைப்பு படையினருடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், குழந்தைகள் 2 பேர் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், சம்பவ இடத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.



மேலும்
-
பிறந்தநாள் விழாவில் அசைவம் சாப்பிட்டவர் உயிரிழப்பு: புதுக்கோட்டை அருகே சோகம்
-
போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க முன்னுரிமை : உச்சநீதிமன்றம் உத்தரவு
-
யு.பி.எஸ்.சி., தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார் பதவியேற்பு
-
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு: டிரம்ப் எதிர்ப்பு
-
மலையேற்றப் பயிற்சியில் விபத்து: இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு
-
குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் பேட்டி