தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

விருத்தாசலம், : விருத்தாசலம் உட்கோட்ட தனியார் பள்ளி களின் வாகனங்கள், ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா தலைமையில் கூட்டாய்வு நடந்தது.

விருத்தாசலம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதுார், வேப்பூர், மங்கலம்பேட்டை பகுதி களில் இயங்கும் தனியார் பள்ளிகளின் பஸ், வேன் ஆகியவை நேற்று கூட்டாய்வு செய்யப்பட்டது.

ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா ஆய்வு செய்தார். சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன், வட்டாரக் கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் உடனிருந்தனர்.

வாகனங்களின் உரிமம், அவசரகால வழிகள், லைட், பிரேக், கிளெட்ச், முதலுதவி பெட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை சரிபார்த்து, வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில், உட்கோட்ட பள்ளிகளை சேர்ந்த 220 வாகனங்கள் சரிபார்க்கப்பட்டன.

Advertisement