10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!

சென்னை: தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் 10ம் தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், மே 19ம் தேதிக்கு பதிலாக முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அதே நாளில் 11ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியாகிறது.

மேலும்
-
தாயகம் திரும்பிய இந்திய வீரர்; மகிழ்ச்சி பொங்க மனைவி சொன்ன வார்த்தைகள் இதோ!
-
சென்னையில் சுற்றித்திரியும் 1.80 லட்சம் தெருநாய்கள்; மைக்ரோசிப் பொருத்தும் நடவடிக்கை துவக்கம்
-
மனை அங்கீகாரத்துக்கு ரூ.6,000 லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் நகர் ஊரமைப்பு உதவியாளர்!
-
காஷ்மீரில் வெடிக்காத பாக்., குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ராணுவம் தீவிரம்!
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்