டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!

புதுடில்லி: டில்லியில் பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, பாதுகாப்பு விவகாரங்கள், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த உடன்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 4வது முறையாக அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராணுவத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்
-
தாயகம் திரும்பிய இந்திய வீரர்; மகிழ்ச்சி பொங்க மனைவி சொன்ன வார்த்தைகள் இதோ!
-
சென்னையில் சுற்றித்திரியும் 1.80 லட்சம் தெருநாய்கள்; மைக்ரோசிப் பொருத்தும் நடவடிக்கை துவக்கம்
-
மனை அங்கீகாரத்துக்கு ரூ.6,000 லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் நகர் ஊரமைப்பு உதவியாளர்!
-
காஷ்மீரில் வெடிக்காத பாக்., குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ராணுவம் தீவிரம்!
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்