நீராழி மண்டபத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளை அகற்ற கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, ஒலிமுகமதுபேட்டை அருகில், சர்வதீர்த்தகுளம் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்படுகிறது.

இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், குளத்தின் மைய பகுதியில் உள்ள நீராழி மண்டபத்தின் கோபுரத்தில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன.

இச்செடிகள் வேரூன்றி வளர்ந்து வருவதால், கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் சேதமாவதோடு, நாளடைவில் மண்டபமும் வலுவிழக்கும் நிலை உள்ளது.

எனவே, சர்வதீர்த்தகுளம், நீராழி மண்டபத்தில் வளர்ந்து வரும் அரசமர செடிகளை வேருடன் அகற்ற, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement