தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் புதுப்படங்கள் தயாரிப்பில் சிக்கல்

சென்னை:'பெப்சி' எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைமை அலுவலகத்தில், பெப்சி அமைப்பு மற்றும் அகில இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பெப்சி உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த தொழிலாளர் கூட்டமைப்புக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்களுக்கு ஒத்துழைப்பதில்லை.

புதிய கூட்டமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்த, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், அதை வாபஸ் பெற வேண்டும்.

இல்லையெனில், அவர்கள் தயாரிக்கும் எந்த படத்திற்கும் ஒத்துழைப்பு அளிக்கப்படாது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தயாரிக்கும், புதுப்படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement