போக்சோ குற்றங்கள்

வளர்ப்பு தந்தை கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 36 வயது பெண்ணின் இரண்டாம் கணவர், ரஹமத்துல்லா, 30. அந்த பெண்ணுக்கு முதல் கணவர் வாயிலாக பிறந்த, 12 வயது சிறுமியும் இவர்களுடன் வசித்தார். கடந்த, மூன்று மாதங்களாக, சிறுமியிடம், ரஹமத்துல்லா தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் புகாரின்படி, திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், ரஹமத்துல்லாவை போக்சோ வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

குழந்தைக்கு தொல்லை



திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே இடையன்குடியை சேர்ந்தவர் முத்துராஜா, 30. இவர், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த குழந்தையின் தாய் புகாரில், உவரி போலீசார் முத்துராஜாவை போக்சோவில் கைது செய்தனர்.



மகளுக்கு தொல்லை

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மலைப்பாளையம், எட்டிக்குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நேரு, 35, விசைத்தறி தொழிலாளி. இவரது இரண்டாவது மனைவியின், 12 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் புகாரின்படி, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார், நேருவை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

நோயாளிகளிடம் சில்மிஷம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், இரவு நேரத்தில் வாலிபர் ஒருவர், பெண் நோயாளிகள் பிரிவுக்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபடுவதாக, கடந்த பிப்., 1ல், போலீசாருக்கு புகார் சென்றது.

போலீசார் விசாரித்து, சில்மிஷத்தில் ஈடுபட்ட நாகர்பள்ளம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி கோபி, 22, என்பவரை, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement