புகார் பெட்டி,,

குண்டும் குழியுமான சாலை

கரியமாணிக்கத்தில் இருந்து மடுகரை செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாண்டுரங்கன், நெட்டப்பாக்கம்.

குடிமகன்களால் மக்கள் அச்சம்

தவளக்குப்பம் நகர் பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் குடிமகன்கள் அமர்ந்து மது குடிப்பதால், பொதுமக்கள் அச்சடைமடைகின்றனர்.

கபிலன், தவளக்குப்பம்.

வாகன நெரிசல்

கொக்குபார்க் சந்திப்பில், வாகன நெரிசல் ஏற்படுவதால், கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து சரி செய்ய வேண்டும்.

ராணி, கொக்குபார்க்.

நாய்கள் தொல்லை

நைனார்மண்டபம் பகுதியில் நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.

பாஸ்கர், நைனார்மண்டபம்.

Advertisement