ஒதியம்பட்டு குளுனி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வில்லியனுார்: ஒதியம்பட்டு குளுனி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு குளுனி சி.பி.எஸ்.இ., பள்ளி இரண்டாவது பேட்ஜ் சார்பில், 67 மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பள்ளியளவில் மாணவி கேஷின்யா ஜெகதீஷ் 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி முஸ்கான் 470 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், கேஷர்ணி தண்டபானி 468 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.

மாணவி திவ்யாஜெயின் பொருளாதார பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். 13 மாணவியர் 90 சதவீதத்திற்கு மேலும், 17 மாணவியர் 85 சதவீதத்திற்கு மேலும், 11 மாணவியர் 80 சதவீதத்திற்கு மேலும் மற்ற மாணவியர் அனைவரும் 65 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

அவர்களை பள்ளி முதல்வர் ஜெய்ஸ் ஜான் மற்றும் தாளாளர் எமிலினா ஆகியோர் பாராட்டினர்.

Advertisement