பா.ம.க., நிர்வாகி வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே பா.ம.க., ஒன்றிய செயலாளர் வீட்டில் ரூ. 3 லட்சம் மதிப்புடைய தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து கார்த்திகேயன், 53; பா.ம.க., ஒன்றிய செயலாளர். இவரது வீட்டின் கிழக்கு திசை நோக்கி வீட்டின் கதவும், தெற்கு திசையில் சிறிய மளிகை கடை வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் காலை கார்த்திகேயன் வெளியே சென்றிருந்தார். அவரது மனைவி ஸ்ரீவித்யா மற்றும் மூத்த மகன் இருவரும் வயலுக்கு சென்றுவிட்டனர். மற்றொரு மகன், மளிகை கடையில் வியாபாரத்தை கவனித்து வந்தார்.
விவசாய நிலத்திற்கு சென்ற ஸ்ரீவித்யா மகனுடன் காலை 10:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவுகள் திறந்து பீரோவில் உள்ள துணிகள் சிதறி கிடந்தது. பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 4 சவரன் தங்க செயின் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து முத்துகார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
மேலும்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்