சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் ஆதித்யா பள்ளி 100 சதவீத தேர்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் தேர்வு எழுதிய 588 மாணவர்களும் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் மாணவர்கள் யோகேஷ்வரன் 489, ஸ்ரீஹரன் 486, கிருஷ்ணா சுவேதா 483 மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
கணிதத்தில் யோகேஷ்வரன், ஸ்ரீஹரிணி, அர்கா திவாரி, விஷ்ணுகுமார், அபிமந்த் ஆகியோரும், அறிவியலில் கிருஷ்ணா சுவேதா, மெலின்டா ஜான் முதத்தப்பா ஆகியோரும், தமிழில் கிருஷ்ணபிரியா, சுஜித் ஆகியோரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பாட வாரியான மொழிப்பாடத்தில் 235, ஆங்கிலத்தில் 139, கணிதத்தில் 112, அறிவியலில் 69, சமூக அறிவியலில் 64 மாணவர்கள் 100க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
உயர் சிறப்பு வகுப்பில் (75 சதவீதத்திற்கு மேல்) 388 மாணவர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 8 பேர், 475க்கு மேல் 14 பேர், 450க்கு மேல் 76 பேர், 400க்கு மேல் 253 மாணவர்களும், 60 சதவீதத்திற்கு மேல் 74 சதவீத்திற்குள் 144 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்ட் அனுதா பூனமல்லி ஆகியோர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். பள்ளி முதல்வர், இயக்குநர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன் கூறுகையில், 'ஆதித்யா கல்வி குழுமத்தில் அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவம் மற்றும் பொறியியல், வர்த்தகம், பட்டய கணக்காளர், ஐ.ஏ.எஸ். ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு (நீட், ஜிப்மர், ஜே.இ.இ. சி.ஏ., பவுண்டேஷன்) ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 6ம் வகுப்பு முதல் சிறப்பாக கற்பிக்கப்பட்டு வருகிறது ' என்றார்.
மேலும்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்