ஆந்திராவிலிருந்து கடத்திய ரூ.16 லட்சம் குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு, காரக்குப்பம் மேம்பாலம் அருகே, சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச்சோதனை நடத்தினர்.
நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு அவ்வழியாக வந்த லாரி சோதனைக்கு நிற்காமல் கிருஷ்ணகிரி சாலையில் வேகமாக சென்றது.
போலீசார் துரத்தினர். காரக்குப்பம் அருகே லாரியை நிறுத்தி விட்டு, லாரியில் இருந்தவர்கள் தப்பினர்.
சோதனையில், பாக்கு மட்டைகளை வெளியே வைத்து, உட்புறத்தில், அரசு தடை செய்த புகையிலை பொருட்களை மூட்டைகளில் அடுக்கி இருந்தது தெரிந்தது. 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2,570 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
Advertisement
Advertisement