பாகிஸ்தானுக்கு உளவு: ஹரியானாவில் ஒருவர் கைது!

12

சண்டிகர்: பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக ஹரியானாவின் பானிபட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


பாகிஸ்தானில் உள்ள உளவு அமைப்புகள் மற்றும் சில நபர்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு, ஹரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

24 வயதான நௌமன் இலாஹி உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவரிடம் உள்ள மொபைல்போனில் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நௌமன் இலாஹி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.


கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டத்தை தொடர்ந்து ஹரியானா மாநில போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் நேரத்தில் இல்லாஹியின் கைது நடந்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement