அறிவியல் துளிகள்

1. வெள்ளிக் கோளை ஆராய்வதற்காக சோவியத் யூனியன் 1972 ஆம் ஆண்டு காஸ்மோஸ் 482 விண்கலத்தை அனுப்பியது. இது ஒரு மீட்டர் அகலமும் 495 கிலோ எடையும் கொண்டது. இது செயலிழந்து போய் 53 ஆண்டுகளாகத் தொடர்ந்து பூமியைச் சுற்றி வந்தது. தற்போது இது யாருக்கும் ஆபத்து இல்லாத வகையில் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டது.
Latest Tamil News
2. பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது K2-18 b எனும் கோள். சமீபத்தில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலை இதனுடைய வளிமண்டலத்தை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அங்கே கந்தக வாயுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
Latest Tamil News
3. அமெரிக்காவைச் சேர்ந்த மிஸ்சிசிபி பல்கலை ஆய்வாளர்கள் மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிகிற கருவியை வடிவமைத்துள்ளனர். சிப் வடிவில் உள்ள இதைக் கை கடிகாரம் முதலியவற்றில் அணிந்து கொள்ளலாம். 92.4 சதவீதம் துல்லியத்துடன் மாரடைப்பைக் கண்டறிகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Latest Tamil News
4. பெரும் நோய்கள் ஏற்பட்டு மீண்டு வருபவர்கள் உடலில் நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் உட்கொண்ட ஆன்ட்டிபயாட்டிகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்திருக்கும். எனவே நோயிலிருந்து மீண்டு வருபவர்கள் மற்ற விதமான உணவுகளை விட, குடல் நுண்ணுயிர்களுக்கு அதிக நன்மை செய்கின்ற தாவர அடிப்படையிலான உணவைச் சாப்பிடுவது நல்லது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.
Latest Tamil News
5. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது அது விழித்திரையைப் பாதித்து பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும். சமீபத்திய ஆய்வு ஒன்றில், ரத்த சர்க்கரை குறைந்தாலும் விழித்திரை பாதிப்பு ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement