கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் திடீர் ரெய்டு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அரசு அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.


கர்நாடகாவின் தும்குரு, மங்களூரு, விஜயபுரா, பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு புறநகர் மற்றும் யாத்கிர் ஆகிய 6 மாவட்டங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.


துமகூருவில் உள்ள நிர்மிதி கேந்திராவின் இயக்குநர், தட்சிண கன்னடா மற்றும் மங்களூரில் உள்ள சர்வே மேற்பார்வையாளர், விஜயபுராவில் உள்ள அம்பேத்கர் மேம்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ரேணுகா சதாராலே உள்பட கர்நாடகா அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


பெங்களூருவில் 12 இடங்களிலும், தும்குருவில் 7 இடங்களிலும், பெங்களூரு நகர்ப்புறத்தில் 8 இடங்களிலும், யாத்கிரில் 5 இடங்களிலும், மங்களூரு, விஜயபுராவில் தலா 4 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


இதேபோல, கடந்த வாரம் 4 அரசு அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தியிருந்தனர்.

Advertisement