ஜே.சி.பி., வாகன உரிமையாளரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஜே.சி.பி., வாகன உரிமையாளரை தாக்கிய, 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,45; இவர் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி., இயந்திரம் சொந்தமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், அவரிடம் நாகலுார் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி,45; ஜே.சி.பி., இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து சென்று வேலை செய்தார்.
ஆனால் அதற்குண்டான பணம் தராமல் இருந்ததால் கடந்த, 8 ம் தேதி நாகலுார் பஸ் நிலையத்தில் இருந்தவரிடம் மணிகண்டன் வாடகை பணம் கேட்டார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் நாராயணசாமி, அவரது உறவினர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து மணிகண்டனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், இந்த இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement