ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, நகராட்சி அலுவலகம் முன்பு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், தற்போது அமையவுள்ள புறநகர் பஸ் நிலையம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் இருப்பதால் அமையக்கூடாது. மேலும், ரிங் ரோடு அமைத்து போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Advertisement