ராகுல் மீது நடவடிக்கை : பீஹார் மாவட்ட நிர்வாகம் முடிவு

6

பாட்னா: பீஹாரில் சிஆர்பிசி சட்டத்தின் 163வது விதிகளை மீறியதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க தர்பங்கா மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், காங்கிரசின் நிகழ்ச்சி ஒன்றை துவக்கி வைக்க பீஹாரின் தர்பங்கா மாவட்டத்திற்கு சென்ற ராகுல், அங்குள்ள அம்பேத்கர் மாணவர் விடுதிக்கு செல்ல திட்டமிட்டார். மாணவர்கள் மத்தியில் உரையாற்ற திட்டமிட்டு இருந்தார். ஆனால், வழியில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


இதற்கு கண்டனம் தெரவித்த ராகுல், இந்திய ஒரு ஜனநாயக நாடு. அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது. சர்வாதிகாரத்தால் அல்ல. சமூக நீதி மற்றும் கல்விக்காக குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைச் சந்திக்க பீஹார் அரசு என்னைத் தடுக்கிறது. நிதீஷ்குமார் பயப்படுவதுஏன் எனக்கூறியிருந்தார்.


ராகுல் தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், சிஆர்பிசி சட்டத்தின் 163வது விதிகளை மீறியதற்காக ராகுல் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

Advertisement