மாவட்டத்தில் 5 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டத்தில் ஆற்றோரம் பகுதியான, ஐந்து இடங்களில் மீட்பு, பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.


பள்ளிப்பாளையம், காவிரி ஆற்றோரத்தில் ஜனதாநகர் உள்ளது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயத்தில் எப்படி தப்பிப்பது, பாதுகாத்து கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவரை எப்படி மீட்பது, முதலுதவி அளிப்பது உள்ளிட்டை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நேற்று நடந்தது.

பின் கலெக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது: குமாரபாளையத்தில் பழைய பாலம், பள்ளிப்பாளையம் பகுதியில் ஜனதா நகர் மற்றும் பட்லுார், கொத்தமங்கலம், ஒருவந்துார் ஆகிய ஐந்து இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆற்றில் அதிக நீர் வரத்து வந்தால், எப்படி காப்பாற்றுவது, தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றி சிகிச்சைக்கு அழைத்து செல்வது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இது மாதிரி இடர்பாடுகள் வரும் போது, அரசு நிர்வாகமும், பொது மக்களும் இணைந்து செயல்பட்டால், எந்த உயிரிழப்பும் இல்லாமல் காப்பாற்ற முடியும் என்பதற்காக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு கூறினார்.

Advertisement