ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

புதுடில்லி: இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தொடர்கிறார்.
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய பெண்கள் அணி, ஐந்து 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் 'டி-20' போட்டி ஜூன் 28ல் நாட்டிங்காமில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் பிரிஸ்டோல் (ஜூலை 1), லண்டன் (ஜூலை 4), மான்செஸ்டர் (ஜூலை 9), பர்மிங்காமில் (ஜூலை 12) நடக்கவுள்ளன. மூன்று ஒருநாள் போட்டிகள் சவுத்தாம்ப்டன் (ஜூலை 16), லண்டன் (ஜூலை 19), செஸ்டர்-லி-ஸ்டிரீட்டில் (ஜூலை 22) நடக்கின்றன.
இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கின்றனர். ஷபாலி வர்மா, ஸ்னே ராணா, 'டி-20' அணிக்கு திரும்பினர். வேகப்பந்துவீச்சாளர் ரேணுகா சிங், 'சுழல்' வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீலுக்கு இரு அணியிலும் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டியில் அசத்திய மும்பை வேகப்பந்துவீச்சாளர் சயாலி, ஒருநாள், 'டி-20' அணிக்கு தேர்வானார்.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்யா (விக்கெட் கீப்பர்), ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஸ்னே ராணா, அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி, சுச்சி, ஸ்ரீ சரணி, சயாலி, ஷபாலி வர்மா ('டி-20'), பிரதிகா (ஒருநாள்), தேஜல் (ஒருநாள்).