காட்டு யானையிடம் இருந்து தப்ப முயன்றவர் பலத்த காயம்
மூணாறு: மூணாறு அருகே சின்னக்கானலில் ரோட்டில் நின்ற சக்கை (பலாபழம்) கொம்பன் காட்டு யானையிடம் இருந்து தப்ப முயன்றவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
சின்னக்கானல் பகுதியைச் சேர்ந்த சமாவதி 45, நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வீட்டை நோக்கி சென்றார். அப்போது ரோட்டில் நின்ற சக்கை கொம்பன் யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் டூவீலரை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்த யானை இரண்டு முறை தாக்க முயன்றது. அதனிடம் இருந்து தப்ப முயன்று வேகமாக ஓடியவர் கீழே விழுந்து விலா எலும்பு முறிந்து பலத்த காயம் அடைந்தார். அவர் ராஜாக்காட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடைகள் சேதம்: கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய கானல் எஸ்டேட் பகுதிக்கு அதிகாலை 4:00 மணிக்கு வந்த சக்கை கொம்பன் புதுப்பிரட்டு பகுதியில் நான்கு கடைகளை சேதப்படுத்தியதுடன் அன்னாசி பழம் உள்பட பல்வேறு பொருட்களை தின்றது. இரண்டு மணி நேரம் ரோட்டில் முகாமிட்டதால் போக்குவரத்து தடைபட்டது. சக்கை கொம்பனை காட்டுக்குள் விரட்டிய பிறகு வாகனங்கள் சென்றன.
மேலும்
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி