சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில்...

தோகா: டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் சாதிக்க காத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.
டைமண்ட் லீக் தடகளத்தின் 16வது சீசன் தற்போது நடக்கிறது. இதன் 3வது சுற்று கத்தாரின் தோகாவில் இன்று நடக்கிறது.
இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்குகின்றனர். டைமண்ட் லீக் போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில், இந்திய நட்சத்திரங்கள் அதிகம் பங்கேற்பது இது தான் முதன் முறை.
இதில் நீரஜ் சோப்ரா, தனது 18வது டைமண்ட் போட்டியில் பங்கேற்கிறார். கடந்த 10 தொடரில் தங்கம் அல்லது வெள்ளி என தொடர்ந்து பதக்கம் வென்றார். இம்முறை மீண்டும் அசத்தினால் தொடர்ந்து 11வது முறையாக 'டாப்-2' இடம் பிடிக்கலாம். இவருக்கு கிரனடாவின் ஆண்டர்சன், செக் குடியரசின் ஜாகுப் வாடில்ச் என முன்னணி வீரர்கள் சவால் தர காத்திருக்கின்றனர். தவிர சக இந்திய வீரர் கிஷோர் ஜெனா, சிறப்பாக செயல்பட முயற்சிக்கலாம்.
குல்வீர் அறிமுகம்
இந்திய தடகள வீரர் குல்வீர் சிங், டைமண்ட் லீக்கில் இன்று அறிமுகம் ஆகிறார். இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி, தனது இரண்டாவது லீக்கில் களமிறங்குகிறார். கடந்த ஆண்டு ஈகுனே போட்டியில் பங்கேற்ற இவர், 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் 16வது இடம் பிடித்தார். இம்முறை முன்னேற்றம் அடையலாம்.
மேலும்
-
அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
-
பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு பரங்கிப்பேட்டை அருகே பரபரப்பு
-
கூடுதல் மாணவர்கள் சேர வாய்ப்பு திருத்தணி அரசு கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள்
-
சைபர் கிரைம் அவசர எண்ணில் பேசி பானி பூரி, சாக்லெட் கேட்ட சிறுவன் பெற்றோர், உறவினருக்கு எஸ்.பி., எச்சரிக்கை
-
குன்றத்துார் சாலையில் விரிவாக்கம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு
-
மின்மாற்றி அமைப்பதில் தாமதம் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் தவிப்பு