அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைபடைத்தனர்.
கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ.,தேர்வில் 16வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சியை தக்க வைத்து சாதனை படைத்துள்ளனர். மாணவர் கைலாஷ் நாத்சாய் 500க்கு 491 மதிப்பெண் பெற்றுபள்ளி அளவில் முதலிடம், மாணவி ஸ்ரீயதிதா 485 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் கங்கேஷ் 482 மதிப்பெண்பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
மொத்தமுள்ள 331 மாணவர்களில் 470க்கு மேல் 15 மாணவர்கள், 450க்கு மேல் 42மாணவர்கள், 400க்கும் மேல் 110 பேர் மதிப்பெண் பெற்றனர். முதல் வகுப்பில் 221 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கணிதம், சமூகஅறிவியல் பாடத்தில் தலா ஒருவரும், தமிழ் பாடத்தில் 16 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். சாதனை மாணவர்களை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம், பள்ளி தலைவர் சிவக்குமார்,லட்சுமி சிவக்குமார், நிர்வாக அதிகாரி சிவராஜ், முதல்வர் மதுரபிரசாத் பாண்டே பாராட்டினர்.
மேலும்
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம்; நான்கு மாவட்டங்களில் துவக்கம்
-
ராமேஸ்வரம் கடல் பகுதியில் பறந்த ட்ரோன்: உளவுத்துறை விசாரணை
-
கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
-
அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'