நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.3,500 வேண்டும்

சென்னை:'நெல் குவின்டாலுக்கு, 3,500 ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில், 1 ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு 36,000 ரூபாய் செலவாகிறது. மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக 100 கிலோ உடைய ஒரு குவின்டாலுக்கு, 2,320 ரூபாய் வழங்கி வருகிறது. அத்துடன் 105 ரூபாய் சேர்த்து, தமிழக அரசு, 2,425 ரூபாய் வழங்கி வருகிறது.

இதனால், நெல் விவசாயத்தில் இருந்து விவசாயிகள் வெளியேறி வருகின்றனர். நாட்டின் நெல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு, 8.62 சதவீதத்தில் இருந்து, 5.64 சதவீதமாக குறைந்துள்ளது. அரிசிக்காக தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், குவின்டாலுக்கு 3,500 ரூபாய் வழங்கி, நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement