மோசமான வானிலையால் வட்டமடித்த விமானம்

அவனியாபுரம் : ஐதராபாத்தில் இருந்து மதுரைக்கு இண்டிகோ விமானம் வழக்கமாக மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு மாலை 4:35 மணிக்கு வந்தடையும். அந்த விமானம் நேற்று இரு குழந்தைகள் உள்ளிட்ட 147 பயணிகளுடன் மதியம் 3:25 மணிக்கு ஐதராபாத்தில் புறப்பட்டு மாலை 5:05 மணிக்கு மதுரை வந்தது.

அந்தநேரம் மதுரையில் பலத்த காற்று இடியுடன் கூடிய மழை பெய்ததால் விமானம் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் சிவகங்கை, திருப்புவனம், திருமங்கலம், கள்ளிக்குடி பகுதி வானில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வட்டமடித்தது. வானிலை சீரான பின் மாலை 6:05 மணிக்கு அந்த விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது.

Advertisement