கண்டக்டரை தாக்கிய இருவர் மீது வழக்கு

திருப்பூர்,; பூண்டி அருகே, அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருப்பூர், முதலிபாளையத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 54. அரசு பஸ் கண்டக்டர். அவிநாசியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த பஸ்சில் கருப்பசாமி பணியில் இருந்தார்.

அப்போது, வழியில் உள்ள ஒரு பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டிய ஒரு பெண் பயணி, பஸ் ஸ்டாப்பைக் கடந்த பின், பஸ்சை நிறுத்துமாறு சப்தம் போட்டார். இதனிடையே பஸ் அடுத்த ஸ்டாப் சென்று விட்டது. இது குறித்து பெண் பயணி, கண்டக்டருடன் விவாதம் செய்துள்ளார்.

அப்போது பஸ்சிலிருந்த இருவர் இது குறித்து கருப்பசாமியிடம் வாக்குவாதம் செய்து, அவரை கீழே தள்ளி தாக்கினர். இதில், காயமடைந்த கருப்பசாமி திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இது குறித்து புகாரின் பேரில், தேவம்பாளையத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் மீது திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement