போதை மாத்திரை விற்றவருக்கு 'காப்பு'

சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார், அங்குள்ள சந்தைப்பேட்டையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருவர் போதை மாத்திரைகளை விற்றதை கண்டுபிடித்தனர். அவரை பிடித்து விசாரித்ததில், செங்கனுாரை சேர்ந்த செல்வராஜ், 27, என தெரிந்தது. 60 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Advertisement