நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்

லண்டன்: வங்கி மோசடி வழக்கில் பிரிட்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498.20 கோடி கடனை பெற்று, அதனை திருப்ப செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பி சென்று விட்டார். பிறகு, சி.பி.ஐ., அளித்த புகாரின் பேரில், கடந்த 2019ம் ஆண்டு பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேண்ட்ஸ்வெர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தனக்கு எதிராக கொலை முயற்சி நடப்பதாகக் கூறி, இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது அவரது 10வது ஜாமின் மனுவாகும்.



மேலும்
-
ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., இருவரும் தே.ஜ., கூட்டணியில் தொடர்கிறார்கள்; நயினார் நாகேந்திரன்
-
9 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
-
பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
-
பயங்கரவாதிகளுக்கு ரூ.14 கோடி நிதியளித்த பாகிஸ்தான்; புட்டு புட்டு வைத்த ராஜ்நாத் சிங்!
-
48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்... முக்கிய பயங்கரவாதி என்கவுன்டர்!
-
முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை: அண்ணாமலை 'பளீச்'