2 கைதிகளை காவலில் எடுத்து திருடிய நகையை மீட்ட போலீஸ்

வாழப்பாடி, ஆத்துார் அடுத்த மல்லியக்கரை அருகே சீலியம்பட்டியை சேர்ந்த, குமரேசன் மனைவி மணிமேகலை, 40. இவரது மகள் கோபிகா, 20. இருவரும் கடந்த, 13 இரவு, மல்லியக்கரையில் இருந்து அயோத்தியாப்பட்டணம் நோக்கி, 'மேஸ்ட்ரோ' மொபட்டில், சிங்கிபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது பைக்கில் வந்த இருவர், கோபிகா அணிந்திருந்த, 1.6 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர். கோபிகா புகாரில் வாழப்பாடி போலீசார், 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில், நகை பறித்தவர்களை தேடினர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸ் எல்லையில் நகை பறித்த சிறையில் இருந்த, சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரஞ்சித், 21, அவரது உறவினர் யுவராஜ், 25, ஆகியோர் தான், கோபிகாவிடம் நகை பறித்தது தெரிந்தது. இருவரையும், நேற்று முன்தினம், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களிடம், 1.4 பவுன் சங்கிலியை மீட்டனர். பின் வாழப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும், நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

Advertisement