ஜோதி கன்னியம்மன் வீதியுலா

வாலாஜாபாத்:வாலாஜாபாத் 13வது வார்டில், பஜார் வீதி அருகே ஜோதி கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்தாண்டிற்கான சித்திரை மாத உற்சவ விழா, நேற்று முன்தினம் நடந்தது.

விழாவையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடந்தது. அதை தொடர்ந்து, மாலையில் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இரவு 9:00 மணிக்கு, மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது, பக்தர்கள் சீர்வரிசை தட்டுக்களில் பழங்கள், காய்கறிகள், நவதானிய பொருட்கள் கொண்டு வந்து கன்னிகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

அதை தொடர்ந்து, ஜோதி கன்னியம்மன் மற்றும் வெள்ளேரியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி ஆயுதங்களை கையில் ஏந்தியபடி வீதியுலா நடைபெற்றது.

அவர்களுடன் வினாயகர், முருகன் மற்றும் வராகி அம்மனும் தரிசனம் தந்தனர்.

Advertisement