'அம்ரூத்' குடிநீர் திட்டப் பணிகளை 3 மாதங்களில் முடிக்க கலெக்டர் உத்தரவு
கம்பம்: 'அம்ரூத்' குடிநீர் திட்டப் பணிகள் 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தகாரர்களுக்கு கலெக்டர் ரஞ்ஜித் சிங் உத்தரவிட்டார்.
உத்தமபாளையும், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, ஓடைப்பட்டி பேரூராட்சிகளில் 'அம்ரூத்' குடிநீர் திட்ட பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளாகியும், திட்டப்பணிகள் நிறைவு பெறவில்லை. இந்த நான்கு பேரூராட்சிகளிலும் பாதி கிணறு தாண்டிய நிலையில் பணிகள் உள்ளது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர், பேரூராட்சிகளின் தலைவர்கள், செயல் அலுவலர்கள், சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர்கள் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., வின் வேண்டுகோளை ஏற்று கலெக்டர், ஒப்பந்தகாரர்கள் உடனடியாக பணிகளை முடிக்க கூறினார். அதற்கு ஒப்பந்தகாரர்கள் 7 மாத அவகாசம் கேட்டனர். இதற்கு மறுத்த கலெக்டர், '3 மாதங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் பணிகளை முடித்து குடிநீர் சப்ளையை துவக்க உத்தரவிட்டார்.
மேலும்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி