10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 93.80 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
மாணவிகளே முதலிடம்!
10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவிகள் 4,17,183 (95.88%) தேர்ச்சி பெற்றுள்ளனர்; மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:
அரசுப் பள்ளிகள்- 87.34%
அரசு உதவி பெறும் பள்ளிகள்- 93.09%
100/100 மார்க்!
பாடம் வாரியாக,100/100 மார்க் எடுத்தவர்கள் விவரம்:
மொழிப்பாடம்- 32
தமிழ் - 8
ஆங்கிலம்- 346
கணிதம்- 1,996
அறிவியல்- 10,838
சமூக அறிவியல்- 10,256
சிவகங்கை முதலிடம்!
10ம் வகுப்பு தேர்வில் 'டாப் 10' மாவட்டங்கள் (தேர்ச்சி விகிதம்);
சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 98.31 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1. சிவகங்கை- 98.31%
2.விருதுநகர்- 97.45%
3. தூத்துக்குடி-96.76%
4. கன்னியாகுமரி-96.66%
5. திருச்சி- 96.61%
6. கோவை-96.47%
7. பெரம்பலூர்- 96.46%
8. அரியலூர்- 96.38%
9. தர்மபுரி-96.31%
10. கரூர்-96.24%
தேர்வு முடிவுகளை https://www.digilocker.gov.in/, https://tnresults.nic.in/ இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு அறியலாம். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 92.09 சதவீதம மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் முதலிடம்!
11ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலுார் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 97.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100/100 மார்க்!
11ம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடம் வாரியாக 100/100 மதிப்பெண் பெற்றவர்கள்:
தமிழ்- 41
ஆங்கிலம்- 39
இயற்பியல்-390
வேதியியல்-593
உயிரியல்-91
கணிதம்-1,338
தாவரவியல்-4
விலங்கியல்-2
கணினி அறிவியல்-3,535
வரலாறு-35
வணிகவியல்- 806
கணக்குப்பதிவியல்- 111
பொருளியல்-254
கணினிப் பயன்பாடுகள்- 761
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்- 117
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.





மேலும்
-
17 கிராமங்களுக்கு கிடைத்தது மின் வசதி; சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்புக்கு கை மேல் பயன்!
-
தேசிய சட்டப்பல்கலையின் சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்
-
இந்தியாவில் பாக்., கொடி விற்பனை: ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
-
கல்விக்கு வயது தடையில்லை; 70 வயதிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி பாஸ் ஆன முதியவர்
-
ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., இருவரும் தே.ஜ., கூட்டணியில் தொடர்கிறார்கள்; நயினார் நாகேந்திரன்
-
9 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்