பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு

1


சண்டிகர்: பஞ்சாப் போலீசார் உடன் இணைந்து, விழிப்புடன் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் டார்ன் தரன் மாவட்ட எல்லையில், பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோனைக் கைப்பற்றினர்.


பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் வாயிலாக ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க, எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு கருவிகளை பஞ்சாப் அரசு நிறுவி உள்ளது.
இந்த கருவிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்தி வரும் ட்ரோன்களை துல்லியமாக, சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது.



இந்நிலையில் டார்ன் தரன் மாவட்ட எல்லையில் ஒரு பாகிஸ்தான் ட்ரோனை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டதா, ஆயுதங்கள் அல்லது போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா என கண்டறியும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement