டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

புதுடில்லி: டில்லியில் சரிந்து விழும் நிலையில் நான்கு மாடி கட்டடங்கள் உள்ள நிலையில், அதனை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
கிழக்கு டில்லியின் பிஹாரி காலனி ஷாஹ்தாராவில் உள்ள நான்கு மாடி கட்டடம் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நான்கு மாடி கட்டடத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைவரையும் அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மாநகராட்சி அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் நான்கு மாடி கட்டடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கட்டடத்தை காலி செய்யுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., இருவரும் தே.ஜ., கூட்டணியில் தொடர்கிறார்கள்; நயினார் நாகேந்திரன்
-
9 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
-
பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
-
பயங்கரவாதிகளுக்கு ரூ.14 கோடி நிதியளித்த பாகிஸ்தான்; புட்டு புட்டு வைத்த ராஜ்நாத் சிங்!
-
48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்... முக்கிய பயங்கரவாதி என்கவுன்டர்!
-
முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை: அண்ணாமலை 'பளீச்'