தலைகுனிவை ஏற்படுத்திய கவர்னர்: அமைச்சர் கோவி.செழியன் பாய்ச்சல்
சென்னை":
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை:
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழாவை, கவர்னர் நடத்தி இருப்பது கண்டனத்துக்குரியது.
பல்கலை தோறும் மதவாத பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கவர்னர், ஊழல் வழக்கில் உள்ளவரை, அதிலும், பினாமி கம்பெனி உருவாக்கி, ஊழல் புகாரில் சிக்கியவரை, எப்படி கவர்னர் மாளிகையில் வரவேற்றார்.
ஜெகன்னாதன், முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டு, போலீஸ் விசாரணைக்கு ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர். துணைவேந்தராக இருக்கும்போதே, ஜாதி பெயரை சொல்லி, ஒருவரை திட்டியதால், வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழான வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், கைது செய்ய நேரிடும் என, உயர் நீதிமன்றத்தாலேயே எச்சரிக்கப்பட்டவர்.
இவரது பதவிக்காலம் முடிந்த பிறகும், பணி நீட்டிப்பு வழங்கியதோடு, அவரது பிரிவு உபசார விழாவை, கவர்னர் மாளிகையிலே நடத்தியதன் வாயிலாக, 'வேந்தர்' என்ற பொறுப்பில் இருப்பதற்கான தகுதியை, கவர்னர் இழந்து விட்டார்.
தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, உயர் கல்வியின் மாண்பை சீர்குலைத்துள்ள கவர்னர், பல்கலை வரலாற்றில், தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி