இறந்தவர்கள் பெயரில் பட்டாவாரிசுதாரர் பெயரில் மாற்ற நிபந்தனை; நில நிர்வாக ஆணையரகம் நடவடிக்கை
சிவகங்கை : தமிழகத்தில் இறந்தவர்களின் பெயரில் உள்ள பட்டாக்களை, வாரிசுதாரர்கள் பெயரில் மாற்றிக்கொள்ள அரசு நிபந்தனை விதித்துள்ளது.
தமிழகத்தில் நகரம், கிராமங்களில் நிலங்களின் நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம் எளிதில் அறிந்து கொள்ளும் விதம் இணையதளம் கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பெரும்பாலான சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருந்து வருகிறது. அந்த பட்டாக்களில் தற்போதைய வாரிசுதாரர்கள் பெயர், நிலத்தின் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் உள்ளன.
எனவே பட்டாவில் உள்ள இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, அவரது வாரிசுதாரர்களின் பெயர்களில் பட்டாவை மாற்றிக்கொள்ள வேண்டும். அதே போன்று நிலங்களை பதிவு செய்த ஆவணம் மூலம் உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும் என நில நிர்வாக ஆணையரகம் நிபந்தனை விதித்துள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பட்டாக்கள் இன்றைக்கும் இறந்தவர்களின் பெயர்களில் தான் உள்ளன. இதை தவிர்த்து தற்போதுள்ள வாரிசுதாரர், நில உரிமையாளர் பெயரில் மட்டுமே பட்டா மாற்றப்பட வேண்டும் என்பதற்காக இ- சேவை மையம் மூலம் பட்டாவில் பெயர் மாற்றுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என அந்தந்த கலெக்டர்கள் மூலம் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளன. இதற்காக மனு செய்பவர்களின் பட்டாக்களில் தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தி (வருவாய் கணக்கு தீர்வாயம்) கூட்டம் மூலம் பட்டாக்களில் எளிதில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்றனர்.
மேலும்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி