ரேஷனில் பொருள் வாங்காத கார்டுக்கும் வருது குறுந்தகவல்

சிவகங்கை: ரேஷன் கடைகளில் பொருட்களே வாங்காத கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், பொருள் வாங்கியதாக குறுந்தகவல் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் பண்டகசாலை வாயிலாக, 35,083 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகளில், 2 கோடியே 25 லட்சத்து 24,784 கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்குகின்றனர்.

பொருட்கள் வாங்கிய விபரங்கள் அந்தந்த ரேஷன் கார்டுதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படுகிறது. சில இடங்களில் பொருட்களே வாங்காத நிலையில், வாங்கியதாக குறுந்தகவல் செல்வதாக புகார் எழுந்துள்ளது.

குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரேஷன் கடைகளில் பில்லிங் மிஷின் வாயிலாக தான் விற்பனை நடக்க வேண்டும்.

ஆனால், ஒவ்வொரு கடையிலும் 25 சதவீதம் விற்பனை பில்லிங் மிஷின் இன்றி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்ணை அழைத்து மாநில அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது' என்றனர்.

Advertisement