ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., இருவரும் தே.ஜ., கூட்டணியில் தொடர்கிறார்கள்; நயினார் நாகேந்திரன்

13

சென்னை: ''இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்., என இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறார்கள்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


மதுரையில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு கட்சி தலைவர் கூட்டணி குறித்து முடிவு செய்யலாம். அது அவரது முடிவு. தமிழகத்தில் மக்களுக்கு விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். எல்லோரும் ஒரு அணியில் திரள வேண்டும். மக்கள் நலன் கருதி அனைத்துக் கட்சி தலைவர்களும் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


நிருபர்: சென்னை வந்த அமித்ஷா தன்னை சந்திக்காமல் சென்றது வருத்தம் அளிப்பதாக ஓ.பி.எஸ்., தெரிவித்திருந்தார்.


நயினார் நாகேந்திரன் பதில்: அமித்ஷா வேறு விஷயமாக வந்ததால் ஓ.பி.எஸ்.,ஸை சந்திக்கவில்லை. ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருப்பதால் அவர்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., என இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர்.


இதையடுத்து 2031, 2036-லும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என தமிழக முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு, "சொல்வதற்கு எல்லாம் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் முடிவை தீர்மானிக்க வேண்டியது மக்கள் தான்.


ஒரு கட்சி ஆட்சி அமைப்பது குறித்து கருத்து தெரிவித்தாலும் ஆட்சி அமைக்கும் முடிவை மக்களே தீர்மானிப்பார்கள் என எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய காலத்திலேயே தெரிவித்தார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

Advertisement