பைனலில் பிராத்தனா ஜோடி

டிரனவா: ஐ.டி.எப்., டென்னிஸ் பைனலுக்கு பிரார்த்தனா ஜோடி முன்னேறியது.
சுலோவாகியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா, நெதர்லாந்தின் ஹர்டோனோ அரியானே ஜோடி, உக்ரைனின் வலேரியா, ரஷ்யாவின் எலினா பிரிதன்கினா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை பிரார்த்தனா ஜோடி 6-3 என கைப்பற்றியது. அடுத்த செட்டில் ஏமாற்றிய இந்த ஜோடி 3-6 என கோட்டை விட்டது. பின் நடந்த 'சூப்பர் டை பிரேக்கரில்' 11-9 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 43 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பிரார்த்தனா ஜோடி 6-3, 3-6, 11-9 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் பிரான்சின் கேசினோ, கரோல் ஜோடியை சந்திக்க உள்ளது.

Advertisement