வரிகளை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது: சொல்கிறார் டிரம்ப்!

வாஷிங்டன்: ''அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 100% குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது'' என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து, செய்தி சேனலுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்த பேட்டி: அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 100% குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது. தடைகளை அகற்றுவதில் உறுதியாக இருக்கும் ஒரு நாட்டிற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அவர்கள் வணிகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறார்கள். எல்லோரும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். அனைவருடனும் ஒப்பந்தங்களைச் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நான் வர்த்தகத்தைப் பயன்படுத்தி பகையைத் தீர்த்து, சமாதானத்தை ஏற்படுத்துகிறேன்.
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்கா சீனா மீதான இறக்குமதி வரியை குறைத்து உள்ளது. நான் சீனாவுடன் அந்த ஒப்பந்தத்தைச் செய்யவில்லை என்றால், சீனா கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.





மேலும்
-
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; உயிர் தப்பிய நோயாளிகள்!
-
புனே வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் 2 ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கினர்!
-
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி; குவிகிறது பாராட்டு!
-
பா.ம.க.,வில் நெருக்கடிக்கு சுமுக தீர்வு வரும்: ஜி.கே.மணி நம்பிக்கை
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்