ரெய்டுக்கு சிக்காமல் தப்பி ஓடிய ரத்தீஷ்: வீட்டை பூட்டி சீல் வைத்தது அமலாக்கத்துறை!

8


சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு வந்திருப்பதை அறிந்து தப்பியோடிய தொழிலதிபர் ரத்தீஷின் சென்னை எம்.ஆர்.சி., நகர் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.


டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டருகே துாக்கி வீசப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், தொழில் அதிபர் ரத்தீஷ் உடன், டாஸ்மாக் மதுக்கூடம் டெண்டர் தொடர்பாக, 'வாட்ஸாப் சாட்டிங்' செய்யப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.
இந்த ரத்தீஷ், துணை முதல்வர் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதை விசாரித்து அறிந்து கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரிடம் விசாரிக்க முடிவு செய்தனர்.

பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி., நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ரத்தீஷ் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சென்றனர். ஆனால், அமலாக்கத்துறை வருவதை அறிந்த அவர் ஓட்டம் பிடித்து விட்டார். எனினும் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


இன்றும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அமலாக்கத்துறை ரெய்டுக்கு வர இருப்பதை அறிந்து, அவர் வெளிநாடு சென்று விட்டதாக, இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ரித்தீஷ் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். வீட்டில் உள்ள பணம், நகை, ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement