இந்திய பெண்கள் 'வெண்கலம்' * ஆசிய பீச் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப்பில்...

மஸ்கட்: ஆசிய பீச் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய பெண்கள் அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
ஓமனில் ஆசிய பீச் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடரின் 10 வது சீசன் நடந்தது. பெண்கள் பிரிவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஹாங்காங் களமிறங்கின. முதல் போட்டியில் 0-2 என வியட்நாமிடம் தோற்ற இந்தியா, அடுத்து 1-2 என பிலிப்பைன்சிடம் வீழ்ந்தது. மூன்றாவது போட்டியில் 2-0 என்ற (20-17, 20-17) செட் கணக்கில் இந்திய அணி, ஹாங்காங்கை சாய்த்தது.
அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் 3 போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. முடிவில் 6 போட்டியில் 1 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற வியட்நாம் அணி மூன்றாவது முறையாக (2022, 2023, 2025) சாம்பியன் ஆனது. பிலிப்பைன்ஸ் அணி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி கைப்பற்றியது.
ஆண்கள் ஏமாற்றம்
ஆண்கள் பிரிவில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. இதில் இந்தியா 'பி' பிரிவில் இடம் பெற்றது. பங்கேற்ற 4 லீக் போட்டியிலும் தோற்றது. ஒட்டுமொத்த பட்டியலில் கடைசி இடம் பிடித்து ஏமாற்றியது. ஓமன் அணி 21 ஆண்டுக்குப் பின் தங்கம் கைப்பற்றியது. முன்னதாக 2004ல் சாம்பியன் ஆகி இருந்தது.
மேலும்
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
-
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
-
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அதிகரிக்கணும்: உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்
-
புலிக்குட்டியை தொட்டுப் பார்த்தவர் மீது பாய்ந்தது வழக்கு!
-
வரிகளை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது: சொல்கிறார் டிரம்ப்!