பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை குளுனி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி: லாஸ்பேட்டை, புனித சூசையப்பர் குளுனி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளியவில் மாணவி சப்ரினா மேரி, 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், அஷ்விதா 494 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி ரித்திகா 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பள்ளியில் பிரெஞ்சு, ஆங்கிலம் பாடத்தில்1 மாணவியும், கணிதத்தில் 3 மாணவிகளும், அறிவியல் பாடத்தில் 7 மாணவிகளும்,சமூக அறிவியல் பாடத்தில் 12 மாணவிகளும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவிசுபத்ரா 588 மதிப்பெண்கள், மாணவி நந்தனா 582, அட்சயா 579 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பிரெஞ்சு பாடத்தில் 10 மாணவிகளும், கணிதத்தில் 2 மாணவிகளும், இயற்பியலில் 1 மாணவியும், கணினி அறிவியலில் 8 மாணவிகளும், கணக்கியலில் 2 மாணவிகளும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 1 மாணவியும்100க்கு 100 மதிப்பெண் எடுத்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இம்மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் ரோசலின் பொன்னாடை அணி வித்து, மலர்க்கொத்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும்
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
-
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
-
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அதிகரிக்கணும்: உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்
-
புலிக்குட்டியை தொட்டுப் பார்த்தவர் மீது பாய்ந்தது வழக்கு!
-
வரிகளை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது: சொல்கிறார் டிரம்ப்!