கழிவுநீர் குழாய்களை பாதாள சாக்கடையில் இணைக்க அறிவுறுத்தல்

புதுச்சேரி: வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கழிவுநீர் குழாய்களை பாதாள சாக்கடையில் இணைக்க வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளனர்.

பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் பாதாள சாக்கடை அமைப்பு உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்களின் கழிவு நீர் குழாய்களை பாதாள சாக்கடையில் இணைக்க பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போதுவரை சில வீடுகள், கழிவுநீர் இணைப்பு பணிகளை முடிக்காமல் உள்ளனர். இந்த இணைப்பு பணியை புஸ்சிவீதி கழிவுநீர் உட்கோட்டம் அலுவலகத்தில் விண்ணப்பித்து, முறையான அனுமதி பெற்றவர்கள் மூலம் சொந்த செலவில் இணைப்பு பணியை முடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். தேவைப்பட்டால் உதவிபொறியாளரை அனுகலாம்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement