திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் பிரமோற்சவ விழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 30ம் தேதி முதல் கடந்த 11ம் தேதி வரை அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. 12ம் தேதி கரக திருவிழா, 13ம் தேதி, பகாசூரன் வதம் நிகழ்ச்சி நடந்தது.

14ம் தேதி,திருக்கல்யாணம் உற்சவம், 15ம் தேதி அர்ச்சுனன் தவம் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை இரவு 9:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

போக்குவரத்து பாதிப்பு



கடலுார் - புதுச்சேரி முக்கிய சாலையில் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இரவில் சாமி வீதியுலா, இசைக் கச்சேரி என தினமும்நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதனால், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு நைனார் மண்டப சாலையில், சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது முருங்கப்பாக்கம் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டனர். போக்குவரத்து போலீசார் இல்லாமல், வாகன ஓட்டிகள் தாங்களாகவே வாகனங்களை சீர் செய்து வாகனத்தை ஓட்டி சென்றனர். முக்கிய சாலைகளில் உள்ள கோவில் திருவிழாவில், கூடுதல், போலீசாரை நியமித்து, போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement