எஸ்.என்.எஸ்.,கல்லுாரியில் பட்டமளிப்பு விழா சிறப்பு

கோவை : கோவை வழியாம்பாளையத்தில் உள்ள, எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் தொழில் நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் தலைமை வகித்தார். இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சார்லஸ் ஆண்டறிக்கை வாசித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ''இந்தியா திறன்மிக்க மனித ஆற்றல் கொண்ட நாடாக உள்ளது. தொழில்நுட்ப துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்த நம் நாடு, ஏற்றுமதி செய்யுமளவு முன்னேறி உள்ளது. இன்னும் 6 மாதத்தில் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயங்கும்,'' என்றார்.
விழாவில், எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி துணை முதல்வர் சுதாகர், கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
எந்திரிச்சு வாம்மா... போகலாம் குட்டியானை பாசப்போராட்டம்
-
சனிக்கிழமைகளில் நாள் முழுதும் அன்னதானம் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் துவக்கம்
-
625 தனியார் மின்சார பஸ்கள் விரைவில் இயக்க நடவடிக்கை
-
அ.தி.மு.க., 'மாஜி'க்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'ரெய்டு'
-
தேர்வில் வென்ற மாணவியருக்கு உயர்கல்விக்கான ஆலோசனை
-
டாஸ்மாக் ஊழல்வாதிகளை தப்ப வைக்க தி.மு.க., அரசு முயற்சி: அன்புமணி புகார்