டாஸ்மாக் ஊழல்வாதிகளை தப்ப வைக்க தி.மு.க., அரசு முயற்சி: அன்புமணி புகார்

சென்னை : 'டாஸ்மாக் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை தப்ப வைக்க, தி.மு.க., அரசு முயற்சிப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் தொடர்பாக, அமலாக்கத் துறை நடத்தி வரும் சோதனையில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது கொள்முதல், ஒப்பந்தம் வழங்குவதில் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களால், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் நிறுவனத்தை ஊழல் சுரங்கமாக தி.மு.க., அரசு மாற்றியுள்ளது. டாஸ்மாக் அரசுக்கு காமதேனுபோல பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக உள்ளது.
ஊழலை மூடி மறைக்கும் நோக்குடன், அது தொடர்பான, 40க்கும் மேற்பட்ட வழக்குகளை போதிய ஆதாரங்கள் இல்லை என்று மூடி விடும் முயற்சி நடக்கிறது. ஏற்கனவே, சில வழக்குகள் மூடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
எந்த ஊழலும் நடக்கவில்லை என்றால், அதை தமிழக அரசு துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், டாஸ்மாக் ஊழல் வழக்கின் விசாரணைக்கு, தமிழக அரசு தொடக்கம் முதல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்த ஊழல் தொடர்பான மூல வழக்குகளை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவர். எனவே, டாஸ்மாக் ஊழல் தொடர்பான, 40க்கும் மேற்பட்ட வழக்குகளை, சி.பி.ஐ., விசாரணைக்கு, தமிழக அரசு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
புறாக்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை
-
கரூர்-கோவை சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
-
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
-
வயலுாரில் தெரு விளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
-
டோல்கேட் சுகாதார வளாகம் மூடப்பட்டதால் பொது மக்கள் அவதி
-
பள்ளப்பட்டியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் மக்கள் பீதி